செய்திகள்

2017-ல் இந்திய அளவில் முதல் நாளன்று அதிக வசூல் கண்ட படங்கள்!

எழில்

2017-ல், இந்தியாவில் முதல் நாளன்று அதிக வசூல் கண்ட படங்களின் பட்டியலை திரைப்பட விமரிசகர் தரன் ஆதர்ஷ் வெளியிட்டுள்ளார். 

பாகுபலியின் ஹிந்திப் பதிப்பு இதில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஹிந்திப் படங்களை விடவும் தென்னிந்தியப் படமொன்று இந்தப் பட்டியலில் முதல் இடம் பிடித்திருப்பது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒன்று, இந்திய அளவில் முதல் நாளன்று அதிக வசூல் பெறவேண்டுமென்றால் அது நிச்சயம் ஹிந்திப் படமாகத்தான் இருக்கவேண்டும் என்பது இன்னொருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. இந்தப் பட்டியலில் தெலுங்குப் படத்தின் ஹிந்திப் பதிப்பு இடம்பெற்றுள்ள நிலையில் 2018-ல் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 படம் நிச்சயம் டாப் 5 பட்டியலில் இடம்பிடிக்கும் என நம்பிக்கை கொள்ளலாம். 

1 பாகுபலி 2 (ஹிந்தி) ரூ. 41 கோடி 
2 டைகர் ஹிந்தா ஹை ரூ. 34.10 கோடி
3 கோல்மால் அகைன் ரூ. 30.14 கோடி 
4 டியூப்லைட் ரூ. 21.15 கோடி 
5 ரயீஸ் ரூ. 20.42 கோடி

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. 

ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இந்தியத் திரையுலகில் வேறெந்தப் படமும் இத்தகைய சாதனையைச் செய்ததில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT