செய்திகள்

பாஸ், ஒரு வாரம் டைம் கொடுங்க: தமிழ் ராக்கர்ஸிடம் கெஞ்சும் இயக்குநர்!

எழில்

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பலூன். இசை - யுவன் சங்கர் ராஜா. 

டிசம்பர் 29 அன்று வெளியாகும் இப்படத்தை இணையத்தளத்தில் வெளியிடவேண்டாம் என்று சட்டவிரோதமாகத் திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தின் நிர்வாகத்திடம் இப்படத்தின் இயக்குநர் சினிஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ட்விட்டரில் இதுபற்றி சினிஷ் கூறியதாவது:

பலூன் படத்தை சட்டவிரோதமாக 2650 இணையத்தளங்களில் பதிவேற்றுவதை சென்னை உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. எப்படியும் தமிழ் ராக்கர்ஸைத் தடை செய்யமுடியாது. தமிழ் ராக்கர்ஸ் பாஸ் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க. ஒரு வாரம் டைம் கொடுத்தால் என் தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார் என்று ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT