செய்திகள்

விஜய் - அட்லி படம்: மெர்சல்!

விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளன...

எழில்

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணைந்து உருவாகிவரும் படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. 

ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பிப்ரவரி 1-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. 

விஜய் 61 என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் படத்தின் தலைப்பும் விஜயின் பிறந்தநாளையொட்டி (ஜூன் 22), இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு மெர்சல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு அறிவிக்கப்பட்ட நொடி முதல் விஜய் ரசிகர்கள் இப்படம் பற்றிய புதிய தகவல்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவருகிறார்கள். 

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் படம் வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT