செய்திகள்

வனமகன் திரைப்படத்தில் சூப்பர் ஹிட் பாடல் ‘எம்மா ஏ அழகம்மா!

வனமகன் பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது தெரிந்த

DIN

வனமகன் பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது தெரிந்த விஷயமே . தற்பொழுது இப்படத்தின் 'டேம் டேம்' மற்றும் 'யம்மா யே அழகம்மா' பாடல்களின் வீடியோவும் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

பாடல்கள் படமாக்குவதில் தனி கவனம் செலுத்தும் இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்திலும் அதனை மிக அழகாக செய்துள்ளார். 'டேம் டேம்' பாடலுக்கு 'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். அவருக்கே உரித்தான வியக்கத்தக்க பாணியில் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அதற்கு கதாநாயகி சயீஷாவும் தனது அபாரமான நடனத்தின் மூலம் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார். இசை மற்றும் நடன ரசிகர்களுக்கு இப்பாடல் ஒரு விருந்தாகும்.

'யம்மா யே அழகம்மா' பாடலின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜ் - பாம்பே ஜெயஸ்ரீ கூட்டணி மற்றும் ஒரு ஹிட் பாடலை தந்துள்ளது . மனதை வருடும் மெலடி -பிருந்தா மாஸ்டரின் சிறந்த நடனமைப்பு - திரு அவர்களின் அழகான ஒளிப்பதிவு - இப்படத்தில் தனது அர்ப்பணிப்பால் அனைவரையும் வியக்க வைத்த ஜெயம் ரவி மற்றும் தமிழ் ரசிகர்களை ஏற்கனவே ஈர்த்துவிட்ட சயீஷாவின் தேர்ந்த நடனம் ஆகிய காரணங்களால் இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டாட வைத்திருக்கிறது.

ஜூன் 23 அன்று வெளியாகவுள்ள வனமகனிற்கு இப்பாடல்கள் மூலம் மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT