செய்திகள்

மெர்சல் படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் கலக்குகிறார் விஜய்!

வி. உமா

அட்லியின் இயக்கத்தில் பெயர் அறிவிக்கப்படாமலேயே நடிகர் விஜயின் 61-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. வெளியான 3 மணி நேரத்திலேயே முப்பத்தி ரெண்டாயிரம் பேர் அதனை ரீடிவீட் செய்தனர். விஜய் ரசிகர்களுக்கு இது பெரும் கொண்டாட்டமானது. விஜய் ரசிகர்களின் வாட்ஸ் அப் க்ரூப் மற்றும் தனிப்பட்ட பொரஃபைல் படமாகவும் 'மெர்சல்’ விஜயை வைத்து மகிழ்ந்து வருகின்றனர்.

மெர்சல் படம் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் இணையத்தில் பகிர்ந்து கொண்டிருக்கும் நிலையில் படம் குறித்த புதிய செய்தி கசிந்துள்ளது. மெர்சல் படத் தலைப்பில் உள்ள 'மெ' என்ற எழுத்து மாட்டுக்கொம்பு போல் உள்ளது, இறுதி 'ல்’ எனும் எழுத்தில் மாட்டின் வால் உள்ளது. இந்த டிசைனைப் பார்த்ததும் ஜல்லிக்கட்டு தொடர்பான சம்பவம் படத்தில் இருப்பதாக தெரிகிறது.

இந்தப் படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வந்துள்ளன. பஞ்சாயத்து தலைவராக ஒரு ரோல், டாக்டராக இரண்டாவது ரோல் மற்றும் மேஜிக் நிபுணராக மூன்றாவது ரோலில் கலக்கப் போகிறார் விஜய். அதிலும் மேஜிக் நிபுணர் வேடத்தில் விஜய் அனைவரும் ரசிக்கும் வகையில் காமெடியில் கலக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சீரியஸான மற்ற இரண்டு ரோல்களிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட இந்த மேஜிக் நிபுணர் ரோல் விஜயின் டைமிங் காமெடி அற்புதமாக வெளிவந்துள்ளது. தவிர இந்த நகைச்சுவைப் பகுதி படத்தின் இறுக்கத்தை சற்று தளர்த்த உதவும் என்கின்றனர் படக்குழுவினர். 

தீபாவளிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 அக்டோபரில் வெளி வரப்போவதில்லை என்ற நிலையில் விஜய் படமாவது அதற்குள் தயாராகுமா என்று விசாரித்ததில், மெர்சல் திரைப்படம் அக்டோபர் மாதத்தில், அதாவது தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் மெர்சல் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் சமந்தாவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஜயின் 61-வது படம் என்பதாலும், அட்லி விஜய் காம்பினேஷன் என்பதையும் தாண்டி மெர்சல் இப்போது விஜயின் மூன்று கதாபாத்திரங்களால் மிகப் பெரிய  எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT