செய்திகள்

பாகுபலி 2 வசூல் விவரங்களைப் பெருமிதத்துடன் வெளியிடும் கரன் ஜோஹர்!

சநகன்

ஒரு படம் எவ்வளவு வசூலிக்கிறது என்பதற்கான சரியான நடைமுறை நம் ஊரில் கிடையாது. பலசமயங்களில் சினிமா செய்தியாளர்கள் வழங்கும் வசூல் விவரங்கள்தான் நமக்குக் கிடைக்கும் ஒரே ஆதாரச் செய்தி. அரிதாக சிலசமயங்களில் படத்தயாரிப்பாளர்கள் முன்வந்து ஒன்றிரண்டு வசூல் கணக்குகளைச் சொல்வார்கள். அதிலும் ஒரு தொடர்ச்சி இருக்காது. 

ஆனால் பாகுபலி 2 படத்தின் வசூல் விவரங்கள் சமூகவலைத்தளங்கள் மூலமாகத் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. மேலும் அதன் வெளிநாட்டு வசூல் கணக்குகளும் அதிகாரபூர்வமாகக் கிடைப்பதால் கிரிக்கெட் ஸ்கோர் போல கோடிக்கணக்கான வசூல் தொகையைப் பார்த்துப் பரவசமடைகிறார்கள் ரசிகர்கள்.

பாகுபலி 2 படத்தை ஹிந்தியில் வெளியிட்ட கரண் ஜோஹர், படத்தின் வசூல் விவரங்களை வெளியிடும் பொறுப்பை எடுத்துக்கொண்டுள்ளார்.

முதல் நாளன்று அவர் வெளியிட்ட ட்வீட்: முதல் நாளன்று இந்தியா முழுக்க நான்கு மொழிகளிலும் சேர்த்து ரூ. 121 கோடி என்று அவர் அதிகாரபூர்வமாகத் தகவல் தெரிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.


இதோடு அவர் நிற்கவில்லை. பாகுபலி 2 பட வசூலைத் தெரிவிப்பதில் அவரிடம் பெருமிதம் நன்கு வெளிப்பட்டது. ரசிகர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவர் இதற்கென நேரம் ஒதுக்கித் தகவல்களைத் திரட்டி அதிகாரபூர்வமான தகவலை வழங்கினார். முதல் மூன்று நாள்களில் இந்தியா முழுக்க ரூ 303 கோடி வசூல் என்று தகவல் தெரிவித்து அவர் வெளியிட்ட ட்வீட்:

திங்கள் அன்று இது சினிமா புரட்சி என்று அவர் வெளியிட்ட ட்வீட். திங்கள் அன்று ஹிந்தி பாகுபலி 2-க்குக் கிடைத்த வசூல்:

இதுதவிர ஒவ்வொருமுறையும் வசூலை வெளியிடும் முன்னர், இதோ அடுத்த வசூல் கணக்கை வெளியிடுகிறேன், தயாராக இருங்கள் என்று பில்ட்-அப் கொடுப்பார். இதனால் ரசிகர்களுக்கு பாகுபலி 2 வசூலை அறிந்துகொள்வதில் மேலும் ஆர்வம் ஏற்பட்டது. 

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ட்வீட் இது. பாகுபலி 2 படம் 4 நாள்களில் இந்தியாவில் ரூ. 383 கோடி வசூல் செய்துள்ளது என்கிறார். 

தொடரட்டும் அவரது பொறுப்புள்ள பணியும் ஆர்வமும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT