செய்திகள்

வீடியோவில் உள்ள நடிகை நான்தான். ஆனால்...: சபிதா ராய் கண்ணீர் மல்க பேட்டி

தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது உண்மை என்று அனைவரும் எண்ணிவிடுவார்கள். அதற்காக ஃபேஸ்புக்கில் விளக்கம் கொடுத்துவிடுகிறேன்...

DIN

தனியார் தொலைக்காட்சி நிறுவன மேலாளருடன் டிவி நடிகை சபிதா ராய் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது. 

இதுகுறித்து சபிதா ராய் விளக்கம் அளித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியதாவது:

நடந்த சம்பவம் பற்றி அனைவருக்கும் தெரியும். கடனாகக் கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கச் சென்றபோது வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை போனது.

இதையடுத்து என் அம்மா, நான் சமூகவலைத்தளம் பக்கம் செல்லக்கூடாது என்றார். ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது உண்மை என்று அனைவரும் எண்ணிவிடுவார்கள். அதற்காக ஃபேஸ்புக்கில் விளக்கம் கொடுத்துவிடுகிறேன் என்று வந்துள்ளேன்.

அந்த வீடியோவில் இருப்பதும் நான்தான். சண்டை போட்டதும் நான்தான். ஒரு நடிகை என்பதால் செய்தியாக்கிவிட்டார்கள். வீடியோவில் உள்ளதை வைத்து சித்தரித்து செய்தி வெளியிட்டுவிட்டார்கள். வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார். ஆனால் நான் தைரியமான பெண். என் அம்மாவை நான்தான் கவனிக்கவேண்டும்.  

என் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இருப்பினும் எதையும் தைரியமாக எதிர்கொள்வேன். படித்த படிப்பை வைத்து வேலை செய்வேன். வீட்டு வேலை பார்த்தாவது என் அம்மாவைக் காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரையிருப்பு பகுதியில் திமுக உறுப்பினா் சோ்க்கை

சீவலப்பேரி அருகே லாரி மோதி கோயில் பூசாரி உயிரிழப்பு

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசிப் பணி தொடக்கம்

நெல்லை ரயில் நிலையத்தில் சோதனை

நான்குனேரி வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

SCROLL FOR NEXT