செய்திகள்

வசூல் வேகத்தை எதிர்பார்க்கவில்லை: பாகுபலி 2 தயாரிப்பாளர் பேட்டி

இந்தியாவில் கிடைத்த மொத்த வசூலில் ஹிந்தி பாகுபலி 2, 50 சதவிகிதம் வசூலைப் பெற்றுள்ளது.

எழில்

ஆயிரம் கோடி ரூபாய் வசூல் பெற்ற முதல் இந்தியப் படம் என்கிற பெருமை பாகுபலி 2 படத்துக்கு உண்டு.

இதன் வசூல் சாதனை குறித்து பாகுபலி 2 தயாரிப்பாளர் ஷோபு ஒரு பேட்டியில் கூறியதாவது: 

இந்தியாவில் கிடைத்த மொத்த வசூலில் ஹிந்தி பாகுபலி 2, 50 சதவிகிதம் வசூலைப் பெற்றுள்ளது. மேலும் தெலுங்கு 25%, தமிழ் 15%, கேரளா 10% என வசூலைப் பிரிக்கலாம். ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அடுத்து பாகுபலி 2 படம் 1500 கோடி ரூபாய் வசூலையும் அள்ளும் என எதிர்பார்க்கிறோம்.

பாகுபலி 2 நிச்சயம் வெற்றி பெறும் என எண்ணினோம். ஆனால் இந்த வேகத்தில் வசூல் சாதனைகளைச் செய்யும் என எதிர்பார்க்கவில்லை. பாகுபலி படத்தின் கதை முடிவானபோது இதை இரண்டு பாகங்களாக எடுக்கவேண்டும் என முடிவு செய்தோம் என்றார்.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT