செய்திகள்

ரசிகர் மன்றத்துக்குக் களங்கம் விளைவித்தால்...: ரஜினி எச்சரிக்கை!

உறுப்பினர்களை அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க தலைமை மன்ற நிர்வாகி சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன்...

எழில்

நடிகர் ரஜினிகாந்த் நீண்டநாள்களாக தனது ரசிகர்களை சந்திக்காமல் இருந்த நிலையில், கடந்த வாரம் தொடர்ந்து 5 நாள்கள், சென்னை ராகவேந்திரா திருமண மண்படத்துக்கு வரவழைத்து அவர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அவரது அரசியல் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரஜினி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கும் இக்கடிதம் மூலம் தெரிவிப்பது யாதெனில், எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்துகொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க தலைமை மன்ற நிர்வாகி சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியை கைகூப்பி வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

டி20 தரவரிசையில் மேத்யூ ஃபோர்டு, கார்பின் போஷ் தலா 23, 21 இடங்கள் முன்னேற்றம்!

எஸ்ஐஆர்! மே.வங்கத்தில் 1.2 கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம் - முதல்வர் மமதா வேதனை!

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT