செய்திகள்

தா தா 87 படத்தின் ஹீரோ இவர் தான்!

DIN

கமல் ஹாசனின் அண்ணன் சாருஹாசன் தான் விஜய்ஸ்ரீ.ஜி என்பவர் இயக்கி வரும் 'தா தா 87' என்ற படத்தின் ஹீரோ. அவருக்கு தற்போது 87 வயதாகிறது. சாருஹாசன் குணசித்திர வேடத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல் நிலை காரணமாக சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் இயக்குநர் விஜய்ஸ்ரீ.ஜியின் கதை அவருக்குப் பிடித்துவிடவே, படப்பிடிப்பில் உற்சாகமாக கலந்து கொண்டார். தா தா 87 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷின் பாட்டி!

இந்தப் படத்தில் சாருஹாசனுடன் முக்கிய பாத்திரத்தில் நடிப்பவர், கோலிவுட்டில் ரீ எண்ட்ரியாகியிருக்கும் ஜனகராஜ். சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்த ஜனகராஜ், இந்தப் படத்துக்காக மீண்டும் களம் இறங்கியுள்ளார். இந்த இருவரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யம் நிறைந்த கதைதான் ‘தா தா 87’.

சாருஹாசன் தாதாவாகவும், ஜனகராஜ் ஹீரோயின் அப்பாவாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.

தற்போது தா தா 87 கதையின் இன்னொரு முக்கிய பாத்திரமாக ஆனந்த் பாண்டி ஒப்பந்தமாகியுள்ளார். இவர் கலக்க போவது யாரு மற்றும் ஜோடி நம்பர் 1 போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானவர். மேலும் கதாநாயகிகளாக ஸ்ரீ பல்லவி மற்றும் அனு பல்லவி என இருவர் ஒப்பந்தமாகியுள்ளனர். ஸ்ரீ பல்லவி டோலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். கோலிவுட்டில் தா தா 87 தான் அவரது முதல் படம். அனுபல்லவி ஊட்டியைச் சேர்ந்தவர். இந்தப் படத்தில் அவர் வட சென்னையைச் சேர்ந்த ரவுடிப் பெண்ணாக நடிக்கவிருக்கிறாராம்.

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை சில மாதங்கள் முன்பு நடிகை கேத்ரீன் தெரசா வெளியிட்டுள்ளார். லியான்டர் லீ மார்ட்டி இசையில் கமல் ஹாசன் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT