செய்திகள்

‘டைட்டானிக்’ படத்துக்குப் பிறகு ஜேம்ஸ் கேம்ரூன் படத்தில் நடிக்கும் கேட் வின்ஸ்லெட்!

எழில்

ஓர் இயக்குநரும் கதாநாயகியும் இணைந்து சூப்பர் ஹிட் படம் ஒன்றை கொடுக்கிறார்கள். சூப்பர் ஹிட் என்றால் ஏதோ மூன்று வாரம் மட்டும் திரையரங்கில் ஓடிய படமல்ல. உலகம் முழுக்க பல கோடிகளைச் வசூலித்து ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்ட மகத்தான படம் அது. அதன்பிறகு அந்த இயக்குநருடன் மீண்டும் இணைய கதாநாயகிக்கு 20 வருடங்கள் ஆகிவிட்டன.

டைட்டானிக் படத்துக்குப் பிறகு, 20 வருடங்கள் கழித்து இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் பிரபல நடிகை கேட் வின்ஸ்லெட். கேம்ரூன் தற்போது தொடங்கியுள்ள அவதார் 2 படத்தில் கேட் வின்ஸ்லெட் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸ் கேம்ரூன் கூறியதாவது: 20 வருடங்களாக இருவரும் சேர்ந்து இன்னொரு படம் பண்ணவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். அது இந்தப் படத்தில்தான் சாத்தியமாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

2009-ம் ஆண்டு வெளிவந்த படம் அவதார். ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், உலகளவில் ரூ. 18 ஆயிரம் கோடி ($2.79 பில்லியன்) வசூலை அள்ளி மிகப்பெரிய சாதனை செய்தது. அவதார் படம் மேலும் 4 பாகங்களாக வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் கடந்த வருடம் அறிவித்தார். நான் காணும் கலை என்பது, துல்லியமான கற்பனை உலகம். முதல் பாகத்தை விடவும் சிறப்பாக அமையும். மிகச்சிறந்த காவியமாக உருவாகும். 3டி படமாக உருவாக்கப்படும் அவதார் 2 மற்றும் அதன் இதர பாகங்களை 3டி கண்ணாடியின்றிப் பார்க்கமுடியும் என்று கூறினார். 

டெர்மினேட்டர் படத்தின் இரு பாகங்கள், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற படங்கள் மூலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை முன்னெடுத்த ஜேம்ஸ் கேம்ரூன், 3டி கண்ணாடியின்றி 3டி படம் பார்க்கமுடியும் என்று அறிவித்தது திரையுலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அவதார் படத்தின் அடுத்த நான்கு பாகங்களின் படப்பிடிப்பை கடந்த வாரம் ஆரம்பித்துள்ளார் கேம்ரூன். கேட் வின்ஸ்லெட், சேம் வொர்திங்டன், ஸோ சல்டானா, வீவர் போன்றோர் இப்படங்களில் நடிக்கவுள்ளார்கள். கேம்ரூனின் லைட்ஸ்டார்ம் எண்டர்டெயிண்மெண்ட் இப்படங்களைத் தயாரிக்கிறது.

அவதார் படத்தின் 2-ம் பாகம், 2020, டிசம்பர் 18 அன்று வெளிவரவுள்ளது. அடுத்த மூன்று பாகங்கள் டிசம்பர் 17, 2021, டிசம்பர் 20, 2024, டிசம்பர் 19, 2025 ஆகிய நாள்களில் வெளியாகவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT