செய்திகள்

மணி ரத்னம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட நான்கு கதாநாயகர்கள்!

எழில்

மணி ரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகிய மூன்று கதாநாயகர்கள் நடித்தார்கள். 

இந்நிலையில் காற்று வெளியிடை படத்துக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், நானி என நான்கு கதாநாயகர்கள் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாகப் படக்குழுவினர் கூறியதாவது: மணி ரத்னம் இதுவரை இயக்கிய படங்களிலேயே பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ள படம் இது. சிம்பு, விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் படத்தில் நடிப்பது குறித்து முடிவாகிவிட்டது. நான்காவது கதாநாயகனான நானி மட்டும் இதுவரை ஒப்பந்ததில் கையெழுத்திடவில்லை என்று கூறினார்கள்.

ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளார்கள். இதை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். 

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்துக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT