செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் பெரும் தீ விபத்து: உயிர் தப்பிய நடிகர்!

2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பவர் பாலிவுட்டில் நடிகர் அக்‌ஷய் குமார். ஷங்கர் இயக்கிய

சினேகா

2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பவர் பாலிவுட்டில் நடிகர் அக்‌ஷய் குமார். ஷங்கர் இயக்கிய இப்படத்தின் எடிட்டிங் வேலைகள் நடந்து வருகின்றது. விரைவில் 2.0 ரிலீஸ் ஆகும். அக்‌ஷய் குமாரின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பேட்மேன் ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தது.


 
தற்போது 'கேசரி' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் அக்‌ஷய். அனுராக் சிங் இயக்கும் இப்படத்தில் அக்‌ஷய் குமாரின் ஜோடியாக பர்னீதா சோப்ரா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பைக்கு 200 கி.மீ தள்ளியுள்ள வய் (Wai) என்ற இடத்தில் நடந்து வருகிறது. 1897-ம் ஆண்டு நடந்த சரகாரி போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் சண்டை காட்சியொன்றின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்னல் வேகத்தில் தீ பரவியதில் பல லட்சம் ரூபாய் செலவழித்துப் போடப்பட்டிருந்த பிரம்மாண்ட செட் தீக்கிரையானது. தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக படக் குழுவினர் எவ்வித காயமின்றி தப்பியுள்ளனர். அக்‌ஷய் குமார் தனது பகுதி முடிந்தபடியால் ஏற்கனவே கிளம்பிவிட்டார். இந்த தீ விபத்தால் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஹோலி தினத்தில் வெளியாகும் என்கின்றனர் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னிமலை அருகே ஆட்டுக் கொட்டகை சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

கடம்பூரில் நாட்டு வெடி பறிமுதல்: முதியவா் கைது

கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பட்டவா்த்தி அய்யம்பாளையம் சருகு மாரியம்மன், செல்வ விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

கூடலூரில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி

SCROLL FOR NEXT