செய்திகள்

கமல், ரஜினிகாந்த் பாணியில் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை தொடங்குகிறாரா?

சினேகா

கமல் ரஜினியைத் தொடர்ந்து தளபதி எனச் செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் அரசியலில் ஈடுபடுவார் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளன்று விஜய் மக்கள் இயக்கம் எனும் அமைப்பைத் தொடங்கியிருந்தார். தற்போது ஜூன் மாதம் அவரது பிறந்த நாளன்று நல்லதொரு முடிவை எடுப்பார் எனக் கூறப்படுகிறது. 

ஜிஎஸ்டிக்கு எதிராக மெர்சல் படத்தில் விஜய் பேசிய வசனம் பாஜவினர் பெரும் கோபத்துக்கு ஆளாக்கியது. தனது படங்களுக்கு பிரச்னை வரும் சமயங்களில் மட்டுமே அரசை எதிர்த்து விமரிசனம் செய்தவரல்ல அவர். தன்னுடைய படங்களின் மூலமும், குடிமகன் என்ற ரீதியிலும் தனது கறாரான சாடல்களை பல முறை முன் வைத்துள்ளார். தான் பங்கேற்ற பல மேடைகளில் மக்கள் பிரச்னை குறித்து பேசியிருக்கிறார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சக மனிதருக்கு ஆதரவாக குரல் எழுப்ப அவர் தவறியதில்லை. நீட் தேர்வுப் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவில் தொடங்கி விவசாயிகள் பிரச்னை வரை மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேடைப் பேச்சு, பொது நலன் கொண்ட சந்திப்புக்கள் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் சுறுசுறுப்பாக்க இயங்கி வருபவர் விஜய். அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வருவதன் மூலம் நல்லாட்சி ஏற்படும் என நம்பத் தொடங்கினர். இந்நிலையில் அண்மையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒரு போஸ்டர் அடித்துள்ளனர். அதில், 'தன் பிறந்த தினமான ஜூன் 22 அன்று முடிவு எடுக்கிறார் ஜோசப்விஜய்! தன் நீண்டநாள் மௌனத்தை கலைக்கிறார்! என்று தலைப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

மேலும், தமிழகம் எங்கும் ரசிகர்கள் உற்சாகம், தமிழக மக்கள் மகிழ்ச்சி, அரசியல் கட்சிகள் அதிர்ச்சி, விவசாயிகள் வரவேற்பு, திரையுலகினர் வாழ்த்து போன்ற சொற்றொடர்கள் அந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து அவரிடமிருந்து எவ்வித அதிகாரபூர்வமான தகவலும் இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT