செய்திகள்

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியீடு 

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

DIN

சென்னை: இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

‘அட்டகத்தி’ திரைப்படம் மூலம் இயக்குநரான பா.இரஞ்சித், தொடர்ந்து ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரத்துடன் போர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஹிந்திப் படம் ஒன்றை இயக்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். 

அதேசமயம் தன்னுடைய நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்தார். கதிர், ஆனந்தி நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படம் பரவலான வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 


  
‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'அட்டகத்தி' கதநாயகன் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை, இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அதியன் ஆதிரை இயக்குகிறார். 

ஒளிப்பதிவினை கிஷோர் குமார் கவனித்துக் கொள்ள, டென்மா இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT