செய்திகள்

'கோவிலா இருந்தாலும் குப்பை மேடா இருந்தாலும் எங்களுக்கு ஒண்ணுதான்!' மீண்டும் சர்ச்சையை கிளப்பும் நாச்சியார்!

பாலாவின் இயக்கத்தில் நடிகை ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள நாச்சியார் திரைப்படம் நாளை (16 பிப்ரவரி) வெளிவரவிருக்கிறது. 

சினேகா

பாலாவின் இயக்கத்தில் நடிகை ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள நாச்சியார் திரைப்படம் நாளை (16 பிப்ரவரி) வெளிவரவிருக்கிறது. 

EON ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் பாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘B ஸ்டுடியோஸ்’மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இசை - இளையராஜா. 

பட அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து அனைவரின் கவனத்தையும் எதிர்ப்பார்ப்பையும் பெற்று வரும் நாச்சியாரில் நடிகை ஜோதிகா அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பாலா படத்துக்கே உரிய தீவிரத்தன்மையுடன் கூடிய வசனங்களும் ஜோதிகாவின் கதாபாத்திரமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. சில மாதங்கள் முன்பு வெளியான இதன் முதல் டீஸர் ஜோதிகா பேசும் ஒரு வசைச் சொல்லால் கடும் அதிர்வினை ஏற்படுத்தி சர்ச்சைக்கும் கண்டனத்துக்கும் உள்ளானது. இந்நிலையில் நாச்சியார் படக் குழுவினர் வெளியிட்டுள்ள இந்த இரண்டாவது டீஸரும் மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளது என்று தமது அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

எல்லா சர்ச்சைக்கும் முற்றுப் புள்ளி வைக்குமா நாச்சியார்? அல்லது படமே ஒட்டுமொத்த சர்ச்சைக்கு உள்ளாகுமா என்பதை இன்னும் ஒரே நாள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல்

SCROLL FOR NEXT