செய்திகள்

இன்று 6 தமிழ்ப்படங்கள் வெளியீடு! அடுத்த வாரம்?

எழில்

6 அத்தியாயம், காத்தாடி, கேணி, கூட்டாளி (பிப் 22 வெளியீடு), ஏண்டா தலையில எண்ண வைக்கல, மெர்லின், பிரம்மாண்ட நாயகன்.

நேற்று வெளியான கூட்டாளி உள்ளிட்ட ஆறு நேரடித் தமிழ்ப் படங்கள் இந்த வாரம் வெளியாகியுள்ளன (இன்று 5 படங்கள் வெளியீடு). தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப் ஆகியுள்ள பிரம்மாண்ட நாயகன் படமும் இன்று வெளியாகியுள்ளது. 

ராகவேந்திர ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட நாயகன் என்கிற படத்தில் நாகார்ஜூனா, அனுஷ்கா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - மரகதமணி. இப்படத்தில் பெருமாளின் பக்தையாக அனுஷ்கா நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான ஓம் நமோ வெங்கடேசயா படத்தின் தமிழ்ப் பதிப்பு இது. 

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால், மார்ச் 1 ஆம் தேதி முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும் அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் இன்றைய நிலவரப்படி பிரச்னை இன்னும் சரியாகவில்லை. எனவே அடுத்த வாரம் மார்ச் முதல் திரைப்படங்கள் வெளியாகாது என்கிற நிலைமையே இன்னமும் நீடித்துவருகிறது.

இதனால் வேலை நிறுத்தத்துக்கு முன்பு வெளியாகும் படங்கள் மட்டுமல்லாமல் 6 படங்களும் சிறிய பட்ஜெட்டில் உருவானவை. இதற்கு ரசிகர்களிடம் எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்று தமிழ்த் திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT