செய்திகள்

நாடோடிகள் 2:  டீசர் வெளியீடு!

முதல் பாகத்தில் இருந்த சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் இணைந்துள்ளது...

எழில்

2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் "நாடோடிகள்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன. இதையடுத்து நாடோடிகள் 2 படம் தொடங்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

முதல் பாகத்தில் இருந்த சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் இணைந்துள்ளது. இசையமைப்பாளர் - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் - ஏகாம்பரம், கலை இயக்குநர் - ஜாக்கி, படத்தொகுப்பு - ஏ.எல்.ரமேஷ். இப்படத்தின் நாயகிகளாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ளார்கள்.

நாடோடிகள் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக இயக்குநர் சமுத்திரக்கனி சமீபத்தில் அறிவித்தார். இதுமட்டுமல்லாமல், நாடோடிகள் படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

SCROLL FOR NEXT