செய்திகள்

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் இவர்தானா?

ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகர்களை ரசிகர்கள் நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள்

சினேகா

ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகர்களை ரசிகர்கள் நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள். தான் விரும்பும் நடிகருடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் அந்தந்த நடிகரக்ளின் ரசிகப் பெருமக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லாவிட்டாலும் இடைத் தரகர்கள் மீடியாக்கள் போன்ற எந்த இடர்பாடும் இல்லாமல் நடிகர்கள் தற்போது தானே தனக்கு விளம்பரம் எனும்படியாக ட்விட்டர் தளம் பயன்பட்டு வருகிறது. இதில் பிஸி நடிகர்கள் நேரடியாக ட்விட்டரில் இயங்க முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவ 'அட்மின்’ உண்டு. இந்த அட்மினின் வேலை நடிகருடைய குரலாக இயங்குவதுதான். அவ்வப்போது அந்தந்த நடிகரும் நேரடியாக ட்வீட்டுவதும் உண்டு.

தமிழ் நடிகர்களைப் பொருத்தவரை ட்விட்டரில் ரஜினி கமல் ஆகியோரின் களம் அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ரஜினி லேட்டாக ட்விட்டரில் எண்ட்ரி கொடுத்ததால் இதுவரை அவரை 4.58 மில்லியன் ரசிகர்கள் மட்டும் தான் பின் தொடர்கிறார்கள். கமலை 4.30 மில்லியன் ரசிகர்கள் தொடர்கிறார்கள். விஜய் அவ்வப்போது தோன்றி மறையும் இடம் ட்விட்டர். அவரை பதினைந்து லட்சம் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

அஜித்தின் ரசிகர்களே அவர்களுடைய இயங்குதளமாக இருக்கின்றனர். சிம்பு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதால் அவருடைய ட்விட்டரில் சிக்கல்களைத் தவிர்த்துவிட்டார். இந்த இயங்குதளத்தில் தற்போது அதிகம் கவனம் பெற்றவர் நடிகர் தனுஷ்தான். காரணம் அவரது பன்முகத்தன்மை. நடிப்பு, பாடல், தயாரிப்பு என எந்த அறிவிப்பாக இருந்தாலும் தனது ட்விட்டர் பக்கத்தில்தான் முதலில் பதிவிடுகிறார் தனுஷ். தனது சக நடிகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கவும், உரையாடுவதும் என அனைத்திற்கும் அவரின் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். இதனால் தனுஷை ட்விட்டரில் ஃபாலோ செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

dhanushkraja என்ற ட்விட்டர் கணக்கில் இயங்கிவரும் நடிகர் தனுஷை 7.5 மில்லியன் ரசிகர்கள் தொடர்கிறார்கள். அண்மையில் அவர் நடித்துள்ள வடசென்னையின் போஸ்டரை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் தனுஷ்.

லைக்ஸ்களை அள்ளிக் குவித்தது அந்த போஸ்டர். சிலர் எது செய்தாலும் அது வைரலாகும். தனுஷ் தான் தற்போது ட்விட்டரில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT