செய்திகள்

பாகிஸ்தான் திரைப்படவிழாவில் தேர்வாகியுள்ளது பாகுபலி 2! 

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில்

ராகேஷ்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதியன்று வெளியானது. இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 

இந்தியத் திரையுலகில் வேறெந்தப் படமும் இத்தகைய சாதனையைச் செய்ததில்லை. வெளியான அனைத்து மொழிகளிலும் பல கோடி வசூலை அள்ளியது.  இந்தப் படம் ஜப்பான், சீனா, பாகிஸ்தான், உள்ளிட்ட பல நாடுகளில் ரிலீஸ் ஆகி வெற்றி வாகை சூடியது.

இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு உலகப் புகழும் அங்கீகாரமும் இதன்மூலம் கிடைத்தது. இந்நிலையில் பாகுபலி 2 பாகிஸ்தான் சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராஜமௌலிக்கு பாகிஸ்தான் கராச்சி நகரிலிருந்து அழைப்பு வந்துளது என்பதை அவரே தனது ட்விட்டரில், கூறியிருக்கிறார், ‘பாகுபலி படம் எனக்கு நிறைய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பை வழங்கியது. இந்த படத்தால் முதல்முறையாக  பாகிஸ்தான் செல்லும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது.  கராச்சியில் நடக்கும் பாகிஸ்தான் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு வந்துள்ளது’ என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT