செய்திகள்

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ வெளியீடு தள்ளிவைப்பு: அரவிந்த் சாமி ஏமாற்றம்!

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். நல்ல முன்பதிவு இருந்தும்...

எழில்

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - பாஸ்கர் ஒரு ராஸ்கல். இசை - அம்ரிஷ். இந்தப் படம் இன்று வெளியாவதாக இருந்த நிலையில் இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் இரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே இன்று வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் வெளியீடு குறித்து அரவிந்த் சாமி ட்விட்டரில் தெரிவித்ததாவது: 

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். நல்ல முன்பதிவு இருந்தும் பின்வாங்கியது குறித்த காரணங்கள் எனக்குத் தெரியாது. என்னுடைய வருத்ததை மட்டுமே என்னால் பகிர்ந்துகொள்ள முடிகிறது. படத்தயாரிப்பில் தயாரிப்பாளருக்கு ஆதரவாக இருந்தேன். படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருந்தவர்களுக்குத் தவறான தகவல் தந்ததாக உணர்கிறேன். எனவே அடுத்த வெளியீட்டுத் தேதி குறித்து ட்வீட் செய்யமாட்டேன். நீங்கள் இந்தப் படத்தைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள் என்று நான் எண்ணுகிறேன். அந்தளவுக்குப் பொழுதுபோக்கான படம் இது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள். இன்று வெளியாகும் படங்களுக்கும் என் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீர்ப்புகளை மாற்றி எழுதும் போக்கு அதிகரிப்பு: உச்சநீதிமன்றம் ஆதங்கம்

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

SCROLL FOR NEXT