செய்திகள்

அடுத்ததாக, தூத்துக்குடியை மாசுபடுத்தியவர்கள் சமூகவிரோதிகள் எனக் கூறுவார்கள்: நடிகர் சித்தார்த்

அடுத்ததாக, தூத்துக்குடியை இத்தனை வருடங்களாக மாசுபடுத்தியது சமூகவிரோதிகள் என அவர்கள் நம்மிடம்...

எழில்

தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டது சாமானிய மக்கள் அல்ல, சமூக விரோதிகள் என, நடிகர் ரஜினிகாந்த் கூறினார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை ரஜினிகாந்த் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். 

பிறகு பேட்டியளித்த ரஜினி கூறியதாவது: தூத்துக்குடி போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டது சாமானிய மக்கள் அல்லர். சில விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்துவிட்டனர். அந்த சமூக விரோதிகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையெனில், தமிழகத்துக்கு ஆபத்து. சமூக விரோதிகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தார். சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் கடைசி நாளில் நடந்ததுபோல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் கடைசி நாளிலும் சமூக விரோதிகள் புகுந்துதான் கெடுத்திருக்கின்றனர். போலீஸாரைத் தாக்கியதும் ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதும் குடியிருப்புகளுக்கும் வாகனங்களுக்கும் தீ வைத்ததும் இந்த சமூக விரோதிகள்தான். இது எனக்கு எப்படித் தெரியும் எனக் கேட்கவேண்டாம். எனக்கு நன்கு தெரியும் அவ்வளவுதான். சமூக விரோதிகள் போலீஸாரை அடித்த பிறகுதான் பிரச்னை பெரிதாகியுள்ளது என்றார். 

தூத்துக்குடி சம்பவத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்டதால்தான் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறிய ரஜினிகாந்த்துக்குப் பலர் கண்டனங்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் குறித்த விவாதத்தில் நடிகர் சித்தார்த்தும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

அடுத்ததாக, தூத்துக்குடியை இத்தனை வருடங்களாக மாசுபடுத்தியவர்கள் சமூகவிரோதிகள் என அவர்கள் நம்மிடம் கூறுவார்கள் என ட்வீட் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT