செய்திகள்

புதிய சாதனை: 5000 திரையரங்குகளில் வெளியாகவுள்ள அமீர் கான் படம்!

வழக்கமாக இந்தியாவைத் தவிர இதர நாடுகளில் ஹிந்திப் படங்கள் 12000 திரையரங்குகளில்தான் வெளியாகும்... 

எழில்

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்கிற படத்தில் முதல்முறையாக அமீர் கானும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளார்கள். கத்ரினா கயிஃப், ஃபாத்திமா சனா சயிக் போன்றோரும் நடித்துள்ளார்கள். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பர் 8 அன்று வெளியாகவுள்ளது.

ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், உலகமெங்கும் 5000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வழக்கமாக இதுவரை ஹிந்தி படங்கள் உலகளவில் 45000 திரையரங்குகளில் வெளியானதுதான் சாதனையாக உள்ளது. இப்போது அந்த எண்ணிக்கையை இந்தப் படம் கடந்துள்ளது.

வழக்கமாக இந்தியாவைத் தவிர இதர நாடுகளில் ஹிந்திப் படங்கள் 12000 திரையரங்குகளில்தான் வெளியாகும். தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை 1500-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் 550 திரையரங்குகளிலும் இங்கிலாந்தில் 200 திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது. இதனால் இந்தப் படம் உலகளவில் முதல் நாளன்று வரி நீங்கலாக ரூ. 60 கோடி வசூலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியை கைகூப்பி வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

டி20 தரவரிசையில் மேத்யூ ஃபோர்டு, கார்பின் போஷ் தலா 23, 21 இடங்கள் முன்னேற்றம்!

எஸ்ஐஆர்! மே.வங்கத்தில் 1.2 கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம் - முதல்வர் மமதா வேதனை!

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT