செய்திகள்

எதிர்மறை விமரிசனங்கள் கிடைத்தும் முதல் நாளில் வசூல் மழை பொழிந்த அமீர் கான் படம்!

எனினும் எதிர்மறை விமரிசனங்களால் வரும் நாள்களில் இதன் வசூல் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எழில்

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்கிற படத்தில் முதல்முறையாக அமீர் கானும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளார்கள். கத்ரினா கயிஃப், ஃபாத்திமா சனா சயிக் போன்றோரும் நடித்து, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ள இந்தப் படம் நேற்று (நவம்பர் 8) வெளியானது.

இதுவரை இந்தப் படத்துக்கு எதிர்மறையான விமரிசனங்களே அமைந்துள்ளன. மிகவும் எதிர்பார்த்த இந்த அமீர் கான் படம் ஏமாற்றியுள்ளதாகப் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவு எழுதியுள்ளார்கள். எனினும் முதல் நாளன்று அபார வசூலை அடைந்துள்ளது.

இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், முதல் நாளன்று மூன்று மொழிகளிலும் சேர்த்து வரி நீங்கலாக கிட்டத்தட்ட ரூ. 52 கோடி வசூலை அடைந்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் 2018-ல் இந்தியாவில் அதிக வசூலை அடைந்த படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

இதற்கு முன்பு சஞ்சு படம் வரி நீங்கலாக ரூ. 34.75 கோடி வசூலைப் பெற்று முதல் இடம் பெற்றது. அதன் வசூலை தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் முறியடித்துள்ளது. ஹிந்தியில் ரூ. 50.75 கோடியும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரூ. 1.50 கோடி வசூலையும் பெற்றுள்ளது. இந்தியா முழுக்க 5000 திரையரங்குகளில் வெளியானது. எனினும் எதிர்மறை விமரிசனங்களால் வரும் நாள்களில் இதன் வசூல் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT