செய்திகள்

சர்காரை தொடர்ந்து ரஜினியின் 2.0 படமும் வருகிறது: தமிழ் ராக்கர்ஸ் டிவீட்

DIN

ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள 2.0 படத்தை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. 

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகி வருகிறது.  இது வரும் நவம்பர் 29 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்தப் படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழ் ராக்கர்ஸ் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

முன்னதாக, விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் ஹெச்டி பிரிண்டில் வெளியாகும் என்று படம் வெளிவருவதற்கு முன்னதாகவே டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. இதை தடுக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும், சர்கார் படத்தை வெளியான முதல் தினமே தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT