செய்திகள்

"எனது கதைக்கருவைத் திருடி எடுத்த படம்": விஜய் ஆண்டனி படத்திற்கு எதிராக களத்தில் பிரபல எழுத்தாளர் 

'எனது கதைக்கருவைத் திருடி எடுக்கப்பட்ட படம்" என்று நடிகர் விஜய் ஆண்டனியின் 'திமிரு பிடிச்சவன்' படத்தின் மீது பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

DIN

சென்னை: 'எனது கதைக்கருவைத் திருடி எடுக்கப்பட்ட படம்" என்று நடிகர் விஜய் ஆண்டனியின் 'திமிரு பிடிச்சவன்' படத்தின் மீது பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

இசையமைப்பாளரும் நடிகருமான் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த நவம்பர் 16 அன்று வெளியான படம் ‘திமிரு பிடிச்சவன்’. இயக்குநர் கணேசாவின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள , இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இந்நிலையில் 'எனது கதைக்கருவைத் திருடி எடுக்கப்பட்ட படம்" என்று 'திமிரு பிடிச்சவன்' படத்தின் மீது பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

சென்ற வருடம் நான் ‘ஒன் இந்தியா’வில் எழுதிய ஆன்லைன் தொடர் ‘ஒன் + ஒன் = ஜீரோ’ இந்த கதையில் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களை ப்ரைன் வாஷ் செய்து, தமக்கு வேண்டாதவர்களைக் கொலை செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கின்றனர் என்பது பற்றி எழுதி இருந்தேன்.

அந்தக் கருவை அப்படியே காப்பியடித்து ‘திமிரு புடிச்சவன்’ திரைப்படத்தை எடுத்துள்ளனர். இவர்கள் எப்போது திருந்துவார்கள்?

இவ்வாறு ராஜேஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

96 மற்றும் சர்கார் பட கதைத் திருட்டு சர்ச்சையினைத் தொடர்ந்து தற்போது ராஜேஷ்குமாரின் இந்த குற்றச்சாட்டு பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT