செய்திகள்

ஜி.வி. பிரகாஷ் அணியினர் செய்த உதவிகளுக்கு இளநீர்களைப் பரிசாக அளித்த டெல்டா பகுதி மக்கள்!

எழில்

தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால், இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் வட்டாரப் பகுதிகள் மிக கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. அனைத்து வகை விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், விவசாயிகளின் 20 ஆண்டு கால உழைப்பையும் நாசம் செய்துள்ளது இந்தப் புயல் சீற்றம். விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி இருக்கிறது. 

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தன்னார்வலர்களைப் பயன்படுத்தி உதவிகள் செய்துவருகிறார். இந்நிலையில், தக்கசமயத்தில் உதவி செய்த திருச்சி கல்லூரி மாணவர்களுக்கு, புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்கள், இளநீர்களைப் பரிசாக அளித்துள்ளார்கள். இத்தகவலை ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் எழுதியதாவது:

#வாழ்ந்தாலும் #வீழ்ந்தாலும் தமிழர்கள் என்றும் மென்மக்களே

டெல்டா பகுதி விவசாயிகளால் என்னுடைய அணியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.  அவர்களிடம் திருப்பிச் செலுத்த அன்பு மட்டுமே உள்ளது. அவர்களுக்கு உதவி செய்ய சரியான தருணம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT