செய்திகள்

பிரபல மலையாள இயக்குநர் காலமானார்!

பிரபல மலையாள இயக்குநர் தம்பி கண்ணன்தானம் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 64.

எழில்

பிரபல மலையாள இயக்குநர் தம்பி கண்ணன்தானம் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 64.

80கள் மற்றும் 90 களில் 15 படங்களை இயக்கியுள்ளார் தம்பி. 1986-ல் மோகன் லால் நடிப்பில் இவர் இயக்கிய Rajavinte Makan ஹிட் ஆனது. இந்தப் படம் தம்பி, மோகன்லால் ஆகிய இருவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. Rajavinte Makan, Vazhiyorakazchakal, Bhoomiyile Rajakkanmar, Indrajaalam, Naadody, Maanthrikam போன்ற படங்களால் தம்பி இன்றைக்கும் நினைவுகூரப்படுகிறார். மோகன்லால் - தம்பி கூட்டணி பல வெற்றிப்படங்களை அளித்துள்ளது.  

1953-ல் பிறந்த தம்பி, இயக்குநர் சசிகுமாரிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர். 1983-ல் தனது முதல் படத்தை இயக்கினார். முதல் மூன்று படங்கள் தோல்வியடைந்த நிலையில் Rajavinte Makan படத்தை இயக்கி கவனம் ஈர்த்தார். இவர், கடைசியாக 2004-ல் ஃப்ரீடம் என்கிற படத்தை இயக்கினார். உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த தம்பி, இன்று காலமானார். தம்பிக்கு குஞ்சுமோள் என்கிற மனைவியும் இரு மகள்களும் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார் கூந்தல்... ஸ்ரீநிதி ஷெட்டி!

கூலி வெற்றிபெற ரஜினி போஸ்டர்களுடன் திருச்சி விநாயகர் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு!

கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT