செய்திகள்

இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் வருகிறார் சில்க்!

சில்க் ஸ்மிதா... சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. 1980, 90-களில், இவர் பெயரை உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது.

DIN

சில்க் ஸ்மிதா... சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. 1980, 90-களில், இவர் பெயரை உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை தன் வசீகர நடிப்பாலும், நடனத்தாலும், உடலமைப்பாலும் கவர்ந்த கவர்ச்சிக் கன்னி.

கதாநாயகன், கதாநாயகி இருவரையும் முடிவு செய்வதற்கு முன்பாக இவரின் கால்ஷீட்டுக்குப் பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருந்த காலம். இந்தக் கவர்ச்சி காந்தம் சினிமா உலகில் வலுப்பெற்றிருந்த காலத்திலேயே, 1996-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி திடீரென மரணத்தைத் தழுவிக் கொண்டது.

இந்நிலையில் அவர் நடித்து வெளி வராத ஒரு படம் இப்போது திரைக்கு வரவுள்ளது. 1995-ம் ஆண்டு, சாதிப் பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் 'ராக தாளங்கள்'. சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி தணிக்கை குழு நிராகரித்ததால் இப்படம் வெளியாகவில்லை.

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அப்படத்தை வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் அப்படத்தின் இயக்குனர் திருப்பதி ராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT