செய்திகள்

ஐந்து தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டன; வெளியானதோ இரண்டு படங்கள்!

ஜீனியஸ், ஜருகண்டி, எடக்கு, கரிமுகன், திருப்பதி சாமி குடும்பம் என ஐந்துப் படங்கள் இன்று வெளியாக இருந்தன... 

எழில்

ஜீனியஸ், ஜருகண்டி, எடக்கு, கரிமுகன், திருப்பதி சாமி குடும்பம் என ஐந்துப் படங்கள் இன்று வெளியாக இருந்தன. ஆனால் வெளியானதோ இரு படங்கள் மட்டுமே. ஜீனியஸ், ஜருகண்டி.

ரோஷன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் - ஜீனியஸ். யுவன் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். 

இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிச்சுமணி எழுதி இயக்கியுள்ள படம் - ஜருகண்டி. ஜெய், ரெபா மோனிகா, ரோபோ சங்கர், டேனியல், அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

ஏன் 5 படங்கள் வெளியாகவில்லை? இந்த இரு படங்களைத் தவிர இதர மூன்றும் சிறிய படங்கள். ஏற்கெனவே வட சென்னை, 96, ராட்சசன், செக்கச் சிவந்த வானம் பரியேறும் பெருமாள், சண்டக்கோழி2 போன்ற படங்கள் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று வேறு இரு புதிய படங்கள் வெளியாவதால் இதற்கு மேலும் 3 சிறிய படங்களுக்கு வாய்ப்பளிக்க முடியாது எனத் திரையரங்குகள் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளன. இதனால் அந்த மூன்று படங்களின் புதிய வெளியீட்டுத் தேதிகள் இனிமேல்தான் தெரியவரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானுக்குப் பேரழிவு ஏற்படும்! - அமெரிக்கா மீண்டும் கடும் எச்சரிக்கை!

டி20 உலகக் கோப்பையை வெல்ல இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு முக்கியம்: ரோஹித் சர்மா

அதர்வாவின் இதயம் முரளி! தங்கமே தங்கமே பாடல் வெளியீடு!

100 கிழவிகளின் மாதிரி... தாய் கிழவி படத்தில் ராதிகாவின் ஒப்பனை!

”NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகள்”: டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் Exclusive

SCROLL FOR NEXT