செய்திகள்

மோடி போன்ற மிகப்பெரிய தலைவரால் தான் இந்த துணிச்சலான முடிவை எடுக்க முடியும்: அமலா பால்

Raghavendran

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிவு போன்ற அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. 

இந்நிலையில், நடிகை அமலா பால் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,

சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கம் வரவேற்கத்தக்து. இதன்மூலம் ஆரோக்கியமான, நம்பிக்கையளிக்கக் கூடிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது சாதாரண காரியமல்ல.

நரேந்திர மோடி போன்ற மிகப்பெரிய தலைவரால் தான் இந்த துணிச்சலான முடிவை எடுக்க முடியும். வருங்காலங்களில் காஷ்மீரில் அமைதி ஏற்பட பிரார்த்திக்கிறேன், ஜெய் ஹிந்த் என்றிருந்தது.

ஆம்ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் மத்திய அரசின் இம்முடிவை பாராட்டி பதிவிட்டதை அமலா பால் ரீட்வீட் செய்து தனது கருத்தை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT