செய்திகள்

கோலிவுட்டை சந்தித்த பாலிவுட்! அமீர்கான் விஜய் சேதுபதி இணையும் புதிய படம்!

சினேகா


பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான் தென்னிந்திய சூப்பர் ஆக்டர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். மெல்போர்னின் இந்திய திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.எம் - (IFFM) 10-வது ஆண்டு நிகழ்வில் சேதுபதி இந்தச் செய்தியை பி.டி.ஐ.க்கு உறுதிப்படுத்தினார். இது குறித்து விஜய் சேதுபதி பகிர்ந்துள்ள தகவல், 'சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் மிகப் பெரிய ரசிகர் நான். அமீர் கானுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.

விஜய் சேதுபதியின் தமிழ் திரைப்படமான 'சங்கத் தமிழன்’ படப்பிடிப்புக்கு அமீர் கான் வருகதை புரிந்ததை அடுத்து, இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் கடந்த மாதம் முதல் வரத் தொடங்கின. 41 வயதான விஜய் சேதுபதி, தான் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மற்றும் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் மிகப் பெரிய ரசிகர் என்பதையும் வெளிப்படையாகக் கூறினார்.

'அமிதாப் பச்சன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், 'பிங்க்' உட்பட அவரது பல படங்களை நான் பார்த்திருக்கிறேன், மேலும் ஐ.எஃப்.எஃப்.எம் இன் முதன்மை விருந்தினராக இருக்கும் ஷாருக்கை சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ் திரைப்படமான 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்காக ஐ.எஃப்.எஃப்.எம்மில் சிறந்த நடிகருக்கான விருதையும் விஜய் சேதுபதி வென்றார்.

"சூப்பர் டீலக்ஸ்" சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்பட பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டது. விழாவில் 'சினிமாவில் சமத்துவம்' (Equality in Cinema) என்ற பிரிவில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆகஸ்ட் 9-ம் தேதி துவங்கிய ஐ.எஃப்.எஃப்.எம், இந்தியா மற்றும் துணைக் கண்டம் முழுவதிலும் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை 22-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரையிடும். இத்திரைப்படத் திருவிழா ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT