செய்திகள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று நூல்: அட்டைப்படத்தை வெளியிட்டார் வித்யா பாலன்

மறைந்த நடிகை ஸ்ரீதேவின் 56-வது பிறந்தநாளான இன்று, அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலின் அட்டைப் படம் வெளியாகியுள்ளது...

எழில்

மறைந்த நடிகை ஸ்ரீதேவின் 56-வது பிறந்தநாளான இன்று, அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலின் அட்டைப் படம் வெளியாகியுள்ளது. 

கடந்த வருடம், துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற நடிகை ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு மயங்கிய நிலையில் குளியல் அறைத் தொட்டியில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், Sridevi: Girl Woman Superstar என்கிற ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியுள்ளார் சத்யார்த் நாயக், இதன் அட்டைப்படத்தைப் பிரபல பாலிவுட் நடிகையும் தமிழ்ப்பெண்ணுமான வித்யா பாலன் இன்று வெளியிட்டுள்ளார். இந்நூலை பெங்குவின் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் புத்தகத்தை வெளியிட ஸ்ரீதேவின் கணவர் போனி கபூர் அனுமதியளித்துள்ளார். இந்தியத் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக ஸ்ரீதேவி உருவானது எப்படி என்பதை சம்பவங்களின் துணையுடன் விவரித்துள்ளார் நூலாசிரியர். 

Sridevi: Girl Woman Superstar நூல் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 75 லட்சம்

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் மாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT