முகப்பு
செய்திகள்

ஆஸ்கர் அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை: சிறந்த ஆவணக் குறும்படம் பீரியட் சிறந்த திரைப்படம் கிரீன் புக்

10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பெருமை ஆஸ்கர் அரங்கில் ஓங்கி ஒலித்துள்ளது.  ஆஸ்கர் அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக,

Updated On : 26 பிப்ரவரி 2019, 2:00 am IST
பகிர்:


10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பெருமை ஆஸ்கர் அரங்கில் ஓங்கி ஒலித்துள்ளது.  ஆஸ்கர் அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, உத்தரப் பிரதேசத்திலுள்ள ஹபூர் கிராமத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட குறும்படமான பீரியட். என்ட் ஆஃப் சென்டென்ஸ், சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது.  இதனை ராய்கா ஜெடாப்சி இயக்கியுள்ளார். 
இதற்கு முன்பு கடந்த 2009-ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார்.
திரைப்பட உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிறந்த திரைப்படமாக கிரீன் புக் தேர்வு செய்யப்பட்டது.  
மேலும், சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த குணச்சித்திர நடிகர் ஆகிய விருதுகளையும் கிரீன் புக் தட்டிச் சென்றது.


மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.  இதில் 10 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்த ஸ்பானிய மொழித் திரைப்படமான ரோமா, சிறந்த அந்நிய மொழித் திரைப்படம்,  சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது.  
மேலும், ஆஸ்கர் விருது பெறும் முதல் மெக்ஸிகோ நாட்டு அந்நிய மொழித் திரைப்படம் என்ற சாதனையை ரோமா படைத்தது. 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி ஃபேவரிட், எ ஸ்டார் இஸ் பார்ன், வைஸ் ஆகிய படங்கள் தலா ஒரு விருதை மட்டுமே பெற்றன.  7 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பிளாக் பேந்தர் திரைப்படம்,  3 விருதுகளைக் குவித்தது. 
 பிரிட்டன் இசைக் கலைஞர் ஃபிரெட்டி மெர்க்குரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான போஹிமியன் ராப்சோடி,  சிறந்த நடிகர்,  சிறந்த ஒலிப்பதிவு,  சிறந்த ஒலிக்கலவை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 4 விருதுகளை அள்ளியது.

விருதுப் பட்டியல்

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.