செய்திகள்

ரேட்டிங்கில் சன் டிவி தொடர்களைப் பின்னுக்குத் தள்ளிய ஜீ தமிழின் ‘செம்பருத்தி’ தொடர்!

சன் டிவி தொடர்களுக்குக் கடும் போட்டியளித்து வருகிறது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிற செம்பருத்தி தொடர்... 

DIN

சன் டிவி தொடர்களுக்குக் கடும் போட்டியளித்து வருகிறது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிற செம்பருத்தி தொடர். வருடக்கடைசி பார்க் ரேட்டிங்கில் இந்தத் தொடர் முன்னிலை பெற்றுள்ளது.

சுலைமான் இயக்கும் செம்பருத்தி தொடரில் ப்ரியா ராமன், ஷபனா, கார்த்திக் போன்றோர் நடித்து வருகிறார்கள். இதுவரை 368 எபிசோட்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் பார்க் டிவி நிகழ்ச்சிகளின் ரேட்டிங்கில் செம்பருத்தி தொடர், வருடக்கடைசியிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி தொடருக்கும் சமீபகாலமாகக் கடும் போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து டிசம்பர் 22 முதல் டிசம்பர் 28 வரையிலான பார்க் ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 10797 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வெற்றிகரமாக 2018 வருடத்தை நிறைவு செய்துள்ளது செம்பருத்தி தொடர். சன் டிவியின் இதர தொடர்களான நாயகி, நந்தினி, கல்யாண வீடு போன்றவைப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

எனினும் அதிக ரேட்டிங் கொண்ட தொலைக்காட்சிகளில் சன் டிவிக்கு முதலிடமும் ஜீ தமிழுக்கு இரண்டாமிடமும் கிடைத்துள்ளன. ஸ்டார் விஜய், கே டிவி, ஆதித்யா டிவி போன்றவை அடுத்த மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

தொலைக்காட்சித் தொடர்களில் சன் டிவி தொடர்களைத் தாண்டி ஜீ தமிழின் செம்பருத்தி தொடர் முதலிடம் பிடித்திருப்பது தொலைக்காட்சி வட்டாரத்தில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி சாமியாா்களுக்கு எதிராக உத்தரகண்ட் அரசு நடவடிக்கை: 300-க்கும் மேற்பட்டோா் கைது

கோதுமை இருப்பு வைக்க கட்டுப்பாடு அதிகரிப்பு: விலை உயா்வைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமீன்!

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் பேரவை தீா்மானம்

நாளைய மின்தடை

SCROLL FOR NEXT