செய்திகள்

திருமண விழாவில் அசத்தும் அழகான பிங்க் நிற புடவையில் ஜொலிக்கும் ப்ரியங்கா சோப்ரா! 

திருமண விழாக்களில் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையில் சேலை உடுத்தும் இந்தியப் பெண்கள் இன்றும் சிலர் இருக்கிறார்கள்

சினேகா

திருமண விழாக்களில் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையில் சேலை உடுத்தும் இந்தியப் பெண்கள் இன்றும் சிலர் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. அவர்களுள் ஒருவர்தான் நடிகை பிரியங்கா சோப்ரா. வெளிநாட்டு மருமகள் ஆனாலும், இந்திய பாரம்பரியத்தை மறந்தவரல்ல. தனது மைத்துனர் ஜோ ஜொனாஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அட்டகாசமான பிங்க் நிற புடவை அணிந்து வந்து அனைவரையும் அசத்தினார்.

கடந்த மாதம் வேகாஸில் திருமணம் விழாவை முடித்த பின்னர், ஜோ ஜோனாஸ் மற்றும் அவரது காதல் மனைவி சோஃபி டர்னர், அதன் தொடர்ச்சியாக தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை ஃப்ரான்சில் நடத்தினர். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன், ஜோவின் சகோதரர் நிக் ஜோனாஸ் மற்றும் அவரது மனைவி ப்ரியங்கா ஆகியோரும் அதில் கலந்து கொண்டனர்.

சாதாரணமாகவே அழகாய் ஜொலி ஜொலிக்கும் ப்ரியங்கா இத்திருமண வரவேற்பு விழாவில் அழகிய வெளிர் பிங்க் நிற சேலையும் அதற்கு பொருத்தமான நகைகளும், தூக்கி வாரிய பன் கொண்டையுமாக எழிலுடன் காட்சியளித்தார். நிக் கருப்பு நிற கோட் மற்றும் அதற்கு ஏற்றவகையில் டை அணிந்து மனைவிக்கு சளைத்தவரல்ல என்று நிரூபித்தார்.

திரைப்பட நட்சத்திரமாக தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை, ப்ரியங்கா சோப்ரா புடவைகளுடன் உறுதியான ஒரு உறவைப் பேணி வருகிறார். அந்தந்த விழாவிற்கு ஏற்ற வகையில் பொருத்தமான சேலையைத் தேர்ந்தெடுத்து அணிந்து மகிழ்வதை ஒருபோதும் தவற விட மாட்டார் பிரியங்கா. மேலும் புடவை அணிந்து பாரம்பரிய தோற்றத்தில் வெகு அழகாக காட்சியளிப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT