செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 31-ம் தேதி வெளியான என்ஜிகே திரைப்படம் சென்னையில் இதுவரை ரூ.3.07 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகிய படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், தேவராஜ், பொன்வண்ணன், தலைவாசல் விஜய், இளவரசு, குரு சோமசுந்தரம், வேல ராமமூர்த்தி, பாலாசிங் ஆகியோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான விமரிசனங்களை எல்லாம் மீறி, இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் சூப்பர் ஹிட். படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.1.03 கோடி வசூல் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை சூர்யா நடிப்பில் வந்த எந்த படமும் முதல் நாளில் ரூ.1 கோடிக்கு அதிகமாக வசூல் குவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரீலிஸான இரண்டாம் நாள் முடிவில் இப்படம் ரூ.1.07 கோடி வசூல் குவித்துள்ளது என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.