செய்திகள்

இந்தப் பக்கம் அஜித் அந்தப் பக்கம் பிரபாஸ்! மாஸ் காட்டும் ட்ரெய்லர் மற்றும் டீஸர்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஜூன் 12) வெளியான முதல் சமூக வலைத்தளங்களில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது.

ராக்கி

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஜூன் 12) வெளியான முதல் சமூக வலைத்தளங்களில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது. அஜித் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது இந்த ட்ரெய்லர்.

தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள சாஹோ படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. யூட்யூப்பில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற இந்த டீஸர்தான் நேர் கொண்ட பார்வை ட்ரெய்லருக்கு சரியான போட்டியாக களத்தில் இறங்கியுள்ளது.

முன்னது ட்ரெய்லர் இது டீசர் என்றாலும் இரண்டு படங்களின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஹைதராபாத், மும்பை, அபுதாபி, துபாய், ரோமேனியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. சாஹோ சுதந்திர தினத்தன்று வெளியாகவிருக்கிறது. நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT