செய்திகள்

கர்ப்பக் காலத்தில் தன்னை உருவக் கேலி செய்யும் ரசிகர்களுக்கு நடிகை சமீரா ரெட்டி பதிலடி!

கரீனா கபூர் போல சிலர் குழந்தை பிறந்தவுடன் அம்சமாகக் காட்சியளிப்பார்கள். என்னைப் போன்றவர்களுக்கு...

எழில்

வாரணம் ஆயிரம் படம் மூலமாகத் தமிழில் கவனம் பெற்ற சமீரா ரெட்டிக்கு 2014-ல் திருமணம் நடைபெற்றது. அடுத்த வருடம் அவருக்கு மகன் பிறந்தான். இப்போது இன்னும்  சில மாதங்களில் சமீராவுக்கு 2-வது குழந்தை பிறக்கவுள்ளது.

இந்நிலையில் அவர் தனது புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டபோது அவரைச் சிலர் உருவக்கேலி செய்தார்கள். இதற்கு சமீரா ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

என்னைக் கேலி செய்பவர்களிடம் ஒரே ஒரு கேள்வியைக் கேட்கிறேன்? நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? நீங்கள் உங்கள் அம்மாவின் வழியாகத்தான் இந்த உலகுக்கு வந்தீர்கள். நீங்கள் பிறந்தபோதே உங்கள் தாய் கவர்ச்சியாக இருந்தாரா? தாய்மை என்பது இயற்கையான நடைமுறை. மிகவும் அழகானது. முதல் குழந்தை பிறந்தபோது எடையைக் குறைக்க எனக்குச் சில காலம் தேவைப்பட்டது. அதேபோல 2-வது குழந்தை பிறந்த பிறகும் எடையைக் குறைக்க சில காலம் ஆகும். 

கரீனா கபூர் போல சிலர் குழந்தை பிறந்தவுடன் அம்சமாகக் காட்சியளிப்பார்கள். என்னைப் போன்றவர்களுக்குப் பழைய எடை, உருவம் கிடைக்க சில காலம் ஆகும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யோலோ படத்தின் பாடல் வெளியானது!

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும்: மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே எச்சரித்த இந்தியா!

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!

யோலோ டீசர்!

SCROLL FOR NEXT