2003-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான திவ்யா ஸ்பந்தனா என்கிற ரம்யா, கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்பட 36 படங்களில் நடித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டு வெளியான 'நாகரஹாவு' இவரது கடைசி படமாகும். இடையில் 2012-ஆம் ஆண்டு காங்கிரஸ் இளைஞரணியில் சேர்ந்த ரம்யா, தனது 31-ஆவது வயதில் மாண்டியா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 2014-ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டபோது தோல்வியடைந்தார்.
காங்கிரஸ் சமூக வலைதள தலைவராக தேசிய அளவில் செயல்பட்டுவந்த ரம்யா, இரண்டாண்டுகளாக மாண்டியா தொகுதி பக்கமே தலைகாட்டாத நிலையில்,
சமீபத்தில் பிரஜ்வால் தேவராஜூடன் இவர் நடித்துள்ள 'தில்கா ராஜா' என்ற படத்தின் டீஸ்ர் வெளியானது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அரசியலை விட்டு விலகி மீண்டும் சினிமாவில் நடிப்பதை ரம்யா தெரியப்படுத்தவில்லையாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.