செய்திகள்

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்! நடிகை ஷ்ரத்தாவா இது?

சினேகா

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப் படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிகச் சிறந்த நடிப்பை வழங்கி மீரா என்ற அக்கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார்.

அண்மையில் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டார் ஷரத்தா. அப்புகைப்படத்தில் ஷ்ரத்தா அடையாளமே தெரியாத அளவுக்கு குண்டாக உள்ளார் அவர். புகைப்படங்களை வெளியிட்டு ஷ்ரத்தா கூறியிருப்பது:

இடதுபுறம் உள்ள புகைப்படம் : கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாலியில் எடுக்கப்பட்டது. நான் வக்கீல் வாழ்க்கையைத் தொடங்கி ஒரு வருடம் முடிந்த பின் எடுத்தது. கை நிறைய பணம், ஜாலியான வாழ்க்கை, உணவு, உடைகள், சினிமா என முன்பு அதிகம் செலவு செய்யாத விஷயங்களுக்கு எல்லாம் செலவு செய்தேன். குண்டாக இருந்தேன். மாதத்திற்கு ஒருமுறை மட்டும்தான் உடற்பயிற்சி செய்வேன். சந்தோஷமாக சாப்பிட்டேன். உருவம் பெரியதாக இருந்தாலும் எனக்குப் பிடித்த உடைகளை அணிந்தேன். நான் அழகில்லை, யாருக்கும் குறைவானவள் இல்லை என்று ஒருபோதும் நினைத்தது இல்லை.

இளம் வயதிலேயே இப்படி இருக்கிறோமே என்று இந்தப் புகைப்படம் எடுத்த பின் மனதில் தோன்றியது. என்னுடைய அபார்ட்மென்ட்டில் உள்ள ஜிம்மிற்கு சென்று டிரெட்மில்லில் ஓடினேன். முதல் நாள் 5 நிமிடங்கள் ஓடிய நான், சிறுக சிறுக முன்னேறி  40 நிமிடங்கள் தொடர்ந்து ஓடினேன்.

வலதுபுறம் உள்ள புகைப்படம் : கடந்த ஆண்டு மே மாதம் டார்ஜிலிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. 5 ஆண்டுகள் கழித்து 18 கிலோ குறைவாக இருந்தேன். சில நாட்கள் ஒரே நாளில் இரண்டு தடவை வொர்க் அவுட் செய்வேன். அச்சமயத்தில் உணவுக் கட்டுபாட்டில் இருந்தேன். முடிந்தபோதெல்லாம் கூடுமானவரை உடற்பயிற்சி செய்கிறேன். உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. என்னைப் நானே பார்க்கும் போது அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதனால்தான் உடல் எடையைக் குறைத்தேன். நீங்களும் உங்களுக்காக எடையை கட்டுக்குள் வைத்திருங்கள். நோயற்ற வாழ்வும், இரவில் நல்ல தூக்கமும் பெற முயற்சி செய்யுங்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக, இதையெல்லாம் உங்களுக்காக நீங்கள் செய்ய வேண்டுமே தவிர மற்றவர்களுக்காக இல்லை’ என்று பதிவிட்டுள்ளார் ஷரத்தா.

தற்போது இரும்புத்திரை 2 படத்தில் நடித்து வருகிறார் ஷரத்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT