செய்திகள்

அத்திவரதருக்குப் பிறகு அதிகக் கூட்டம் கூடியது இந்த விழாவுக்குத்தான்: விஜய்யைப் பாராட்டிய நடிகர் விவேக்!

DIN

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு வெளியாகிறது.

ரஹ்மான் இசையமைப்பில் பிகில் படத்தின் பாடல்கள் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டன. பிகில் பாடல் வெளியீட்டு விழா, சன் டிவியில் வரும் ஞாயிறு அன்று (செப். 22) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:

இசை வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு எனக்கு 3 மணி நேரம் ஆனது. அத்திவரதருக்குப் பிறகு அதிக மக்கள் கூடிய இடமாக இந்த இடத்தைப் பார்க்கிறேன். இப்படத்தில் இடம்பெறும் கால்பந்து ஆட்டங்கள் தொடர்பான காட்சிகள் ஹாலிவுட் படத்துக்கு இணையாக இருக்கும்.

அட்லியின் உழைப்பு எனக்குப் பிடிக்கும். சூரியனைப் போல பிரகாசமாக சுடர் விட்டு எரியவேண்டும் என்றால் சூரியன் போல இடைவிடாமல் எரியணும் (உழைக்கவேண்டும்). அதனால் தான் அட்லி கருப்பாக உள்ளார். வியாழக்கிழமையன்று சாய்பாபா பெயர் கொண்ட கல்லூரியில் பிகில் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது மேலும் ஒரு சிறப்பு என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT