செய்திகள்

‘கோமாளி’ பட இயக்குநருக்கு ஹோண்டா சிட்டி காரைப் பரிசளித்த தயாரிப்பாளர்!

சூப்பர் ஹிட் படத்தை இயக்கி, பெரிய லாபத்தை அளித்ததால் கோமாளி படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு...

எழில்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோமாளி. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியால் படத்தின் டிரெய்லர் அதிகக் கவனத்துக்கு ஆளானது. படம் வெளியான முதல் நாளிலிருந்து கோமாளி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளார். 5-வது வாரத்தில் தமிழகம் முழுக்க 125 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்ததே மக்கள் அளித்த வரவேற்புக்குச் சாட்சி. இந்த வருடம் வெளியான படங்களில் பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு அடுத்ததாக சூப்பர் ஹிட் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது கோமாளி.

இந்நிலையில் சூப்பர் ஹிட் படத்தை இயக்கி, பெரிய லாபத்தை அளித்ததால் கோமாளி படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹோண்டா சிட்டி காரைப் பரிசாக அளித்துள்ளார். ஜெயம் ரவி முன்னிலையில் காரின் சாவியை இயக்குநரிடம் வழங்கினார் ஐசரி கணேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடங்கியது பிக் பாஸ் 9: முதல் போட்டியாளர் திவாகர் - அரோரா!

விற்பனைக்கு வரும் அகல் விளக்குகள் - புகைப்படங்கள்

உணவு தருவதாகக் கூறி... காரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு - புகைப்படங்கள்

மகளிர் உலகக்கோப்பை: பாக். எதிராகப் போராடி ரன் சேர்த்த இந்தியா! 248 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT