செய்திகள்

கருணாஸ் பட கதாநாயகி நவ்னீத் கெளருக்கு கரோனா

அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கதாநாயகியாக நடித்த நவ்னீத் கெளர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

DIN

அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கதாநாயகியாக நடித்த நவ்னீத் கெளர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள நடிகை நவ்னீத் கெளர் ராணா, கடந்த வருடம் நடைபெற்ற மகாராஷ்டிர மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தமிழில் அரசாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நவ்னீத் கெளர் நடித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் 2-வது முறையாகப் போட்டியிட்ட நவனீத் கெளர், மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் தன் கணவரும் சுயேட்சை எம்பியுமான ரவி ராணா தொடங்கிய யுவ ஸ்வபிமானி பக்‌ஷா கட்சி சார்பாக சுயேச்சையாகப் போட்டியிட்டார். சிவசேனா கட்சியைச் சேர்ந்த இருமுறை எம்.பியாக இருந்த ஆனந்த் ராவ் அட்சுலை 36,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.பி. ஆனார். யுவ ஸ்வபிமானி பக்‌ஷா கட்சியை காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிகள் ஆதரித்தன. பஞ்சாபியான நவ்னீத் கெளர், மும்பையில் படித்து வளர்ந்தவர். 

இந்நிலையில் நடிகையும் எம்.பி.யுமான நவ்னீத் கெளர் மற்றும் அவருடைய கணவரும் சுயேட்சை எம்.எல்.ஏ-வுமான ரவி ராணா ஆகிய இருவரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

என் மகள், என் மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். என்னுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்று சமூகவலைத்தளத்தில் நவ்னீத் கெளர் தகவல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT