செய்திகள்

‘உங்களைப் போன்ற நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்கள்’:

DIN

சென்னை: உங்களைப் போன்ற நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்கள்’ என்று நடிகர் ரஜினிக்கு இளம் இயக்குநர் ஒருவர் ஆறுதல் கூறியுள்ளார்.   

தனது உடல்நிலையின் காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய் காலை அறிவித்துள்ளார். என்னை நம்பி வந்தவர்களை நான் பலிகடா ஆக்கவிரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், அது குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பேன் என்று கூறியிருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார் நடிகர் ரஜினி. இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு நீண்ட அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் ‘உங்களைப் போன்ற நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்கள்’ என்று நடிகர் ரஜினிக்கு இளம் இயக்குநர் ஒருவர் ஆறுதல் கூறியுள்ளார்.   

இதுதொடர்பாக ரஜினியின் ரசிகரும் ‘பேட்ட ‘ படத்தின் இயக்குனருமான கார்த்திக் சுப்பராஜ் செவ்வாயன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் அறிக்கையுடன், தலைவா ...‘தயவு செய்து வருந்த வேண்டாம். உங்களைப் போன்ற நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்கள் போல. நீங்கள் எங்களுக்கு மிக முக்கியம் தலைவா. உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் எப்போதும் உங்களை விரும்புகிறோம்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT