செய்திகள்

வருமான வரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆஜர்!

எழில்

சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். 

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் அட்லி இயக்கத்தில், நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையின்போது வெளியான ‘பிகில்’ திரைப்படம் மூலம் ரூ.300 கோடி லாபம் கிடைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏஜிஎஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் திடீா் சோதனை செய்தனா்.

இந்தச் சோதனை முழுமையாக நிறைவடைவதற்கு 4 நாள்களாகின. இதில் ‘பிகில்’ திரைப்படத்துக்கு நிதி உதவி செய்ததால் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்யப்பட்டதாக வருமானவரித் துறை தெரிவித்தது. மேலும் நடிகா் விஜயை அவரது பனையூா் பங்களாவுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா். அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி கணக்கில் வராத பணமும், ரூ.300 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமானவரித் துறை அறிவித்தது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள் ஆகியவற்றை மதிப்பிடும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் அடிப்படையிலும், வரி ஏய்ப்பு தொடா்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் விசாரணை செய்வதற்கு வருமானவரித் துறையினா் நடிகா் விஜய்க்கும், அன்புச்செழியனுக்கும் அழைப்பாணை அனுப்பினா். நடிகா் விஜய், அன்புச்செழியன் ஆகியோரின் ஆடிட்டா்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவில் கடந்த வாரம் ஆஜரானாா்கள். அவா்களிடம் வருமானவரித் துறை அதிகாரிகள், தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனா். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் ஆகியவற்றுக்கு அவா்கள் இருவரும் விளக்கம் அளித்தனா். இந்த விசாரணை சில மணி நேரம் நீடித்தது. 

பிறகு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பிகில் பட ஒப்பந்தம் பற்றி அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட ஏஜிஎஸ் குழும நிர்வாகிகள் விளக்கம் அளித்தார்கள். வருமான வரித்துறை அழைப்பானை அனுப்பியதையடுத்து, விளக்கம் அளிப்பதற்காக நேரில் ஆஜரான அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். 

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக பைனான்சியர் அன்புச்செழியன் ஆஜர் ஆகியுள்ளார். வருமான வரித் துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க அவர் வந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT