செய்திகள்

'ஜுராஸிக் பார்க்’ வரிசையின் கடைசிப் படப் பெயர் அறிவிப்பு

DIN

பிரபல எழுத்தாளர் மைக்கெல் க்ரைட்டன் எழுதிய ஜுராஸிக் பார்க் என்ற நாவலை மையமாக வைத்து ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜுராஸிக் பார்க் படம் 1993-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.  ஜுராசிக் பார்க் வெற்றியைத் தொடர்ந்து டைனோசர்களை  மையமாக வைத்து ஐந்து படங்கள் வெளியாகி வணிகரீதியாகவும் விமரிசனரீதியாகவும் பரவலான வெற்றி பெற்றன.

1993 - ஜுராஸிக் பார்க் முதல் பாகம் - இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்
1997  - தி லாஸ்ட் வேர்ல்ட்: ஜுராஸிக் பார்க் இரண்டாம் பாகம் - இயக்குநர் ஸ்டீபன் ஸ்பில்பெர்க்
2001 - ஜுராஸிக் பார்க் மூன்றாம் பாகம் - இயக்குநர் ஜோ ஜான்ஸ்டன்
2015 - ஜுராஸிக் வேர்ல்ட் - இயக்குநர் கொலின் ட்ரெவாரோ  
2018-   ஜுராஸிக் வேர்ல்ட்: ஃபோலன் கிங்டம் - இயக்குநர் ஜே.ஏ.பயோனா 

தற்போது, ஜுராசிக் வேர்ல்ட் 3 இயக்குனர் கொலின் ட்ரெவாரோ இயக்கத்தில், ஜுராஸிக் வேல்ட் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் தலைப்பு: ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சாம் நீல், லாரா டெர்ன், ஜெஃப் கோல்ட்ப்ளம், கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கும் இப்படத்தை ட்ரெவாரோ ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் இணைந்து தயாரிக்கிறார். ஃபிராங்க் மார்ஷல் மற்றும் பாட் குரோலி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இதுவே ஜுராஸிக் பார்க் பட வரிசையின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதனுக்கும், டைனோஸர்களுக்கும் நடக்கும் போராட்டம்தான் இது வரை கதைக்களமாக இருந்தது. ஆனால் ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் படத்தின் கதை வேறு எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் ஜூன் 11, 2021 அன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT