செய்திகள்

மிரட்டும் மலையாள சூப்பர்ஸ்டார்கள்!

DIN

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள பிக் பிரதர் திரைப்படம் ஜனவரி 16-ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர் சித்திக் உடன் வியட்நாம் காலனி மற்றும் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இக்கூட்டணி 3-ஆம் முறையாக மீண்டும் இணைந்துள்ளது.

பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான் சகோதரர் அர்பாஸ் கான் முதல்முறையாக மலையாளப் படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். ஹனி ரோஸ், அஞ்சலி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் 2 டிரெய்லர்களும், போஸ்டர்களும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

அதுபோன்று மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் புதிய படமான தி பிரீஸ்ட் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஃபின் டி சாக்கோ என்னும் முதல்முறை இயக்குநருடன் மம்முட்டி இணைந்து பணியாற்றுகிறார். திரைக்கதை மற்றும் வசனங்களை தீபு பிரதீப் மற்றும் ஷாம் மோகன் எழுதியுள்ளனர்.

இதில் மம்முட்டிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார். நிகிலா விமல் முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார். இதர திரைப்படங்களில் நடித்து வரும் சூழலில், கதை பிடித்துப்போனதால் இதில் நடிக்க மம்முட்டி சம்மதித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT