செய்திகள்

சாதித்த கனா: ஒரு தமிழ்ப் படத்தின் இரு பாடல்களுக்கு 100 மில்லியன் பார்வைகள்!

யூடியூப் தளத்தில் ஒரு தமிழ்ப் படத்தின் இரு பாடல்கள் முதல்முறையாக 100 மில்லியன் பார்வைகளை அடைந்துள்ளது.

DIN

யூடியூப் தளத்தில் ஒரு தமிழ்ப் படத்தின் இரு பாடல்கள் முதல்முறையாக 100 மில்லியன் பார்வைகளை அடைந்துள்ளது.

இந்தப் பெருமை கனா படத்துக்கும் அதன் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸுக்கும் கிடைத்துள்ளது.

கபாலி படத்தில் நெருப்புடா பாடல் மூலம் கவனம் பெற்ற அருண்ராஜா இயக்குநராக அறிமுகமான படம் இது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவானது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் போன்றோர் இப்படத்தில் நடித்தார்கள். ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன், இசை - திபு நினன் தாமஸ். படத்தொகுப்பு - ஆண்டனி எல். ரூபன்.  

கனா படத்தில் இடம்பெற்றுள்ள வாயாடி பெத்த புள்ளை பாடலின் ஒலிப்பதிவு விடியோவில் சிவகார்த்திகேயனும் அவருடைய மகளும் இடம்பெற்றார்கள். அந்தப் பாடல் இதுவரை யூடியூப் தளத்தில் 175 மில்லியன் (17.5 கோடி) பார்வைகளை அடைந்துள்ளது.

இந்நிலையில் அதே படத்தில் இடம்பெற்றுள்ள ஒத்தையடி பாதையில பாடலும் தற்போது 100 மில்லியன் (10 கோடி) இலக்கை எட்டியுள்ளது.

ஒரு தமிழ்ப் படத்தின் இரு பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளை அடைந்துள்ளது இதுவே முதல்முறை என சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார். 

தமிழ்த் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர்கள் நிகழ்த்திடாத சாதனையை இசையமைப்பாளர் திபு நினன் தாமஸூம் கனா படக்குழுவினரும் சாதித்துள்ளார்கள். இதற்குச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT