செய்திகள்

ஜோதிகா, கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து யோகி பாபு

DIN

சென்னை: பிரபல நடிகைகள் ஜோதிகா, கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்த படமும் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ ஆகிய படங்கள் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகின. ஆனால் இரண்டிற்கும் அவ்வளவு வரவேற்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்த படமும் ஒடிடி தளத்தில் நேரடியாக் வெளியாகவுள்ளது.

யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் `காக்டெய்ல்'. இந்தப் படத்தினை அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார். இதில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளது . அத்துடன் `காக்டெயில்' என்ற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இந்த படத்தை தயாரித்துள்ளார். முதலில் இப்படத்தை மார்ச் 20-ந் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

தற்போது இப்படம் வருகிற ஜூலை 10-ந் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT